என் முழு பலத்தையும் கொண்டு உம்மை வாழ்த்தி ஸ்துதிக்க எனக்கு வரமருளும்.
உமக்காக,உமக்காக மட்டுமே நான் வாழவும்,உழைக்கவும்,துன்புறுவும்,உமக்காகவே நான் சுட்டெரிக்கப்படவும்,மரிக்கவும் எனக்கு அருள்வீராக.
நீர் இன்னும் அதிகமாகவும்,மிகப் பரவலாகவும் மகிமைப்படுத்தப்படும்படி என்னால் ஆனதைச் செய்ய எனக்கு அருள்வீராக.
இதுவரை யாரும் உமக்குச் செலுத்தாத அளவுக்கு நான் உமக்கு மரியாதை வணக்கம் செலுத்த எனக்கு அருள்வீராக.
நீர் மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற தங்கள் ஆர்வத்தில் மற்றவர்கள் எனக்கு மேம்பட்டிருக்கவும்,அப்போது, ஒரு மேன்மையுள்ள போட்டி மனப்பான்மையோடு, சகல சிருஷ்டிகளுக்கும் மேலாக எவ்வளவோ வாக்குக்கெட்டாதா விதமாக உம்மை உயர்த்தியவரால் ஆசிக்கப்பட்ட விதமாக,அடியேன் உமது பக்தியை இன்னும் ஆழமாகவும், வேகமாகவும்,அற்புதமாகவும் பரப்பவும் எனக்கு அருள்வீராக.ஆமென்
Comments are closed.