அன்பார்ந்த நண்பர்களே!
இயேசு தம்மைத் ”திராட்சைச் செடி” என்றும் தம்மில் நம்பிக்கை கொள்வோரைத் ”திராட்சைக் கொடி” என்றும் உருவகித்துக் கூறுகிறார். செடியோடு இணைந்திருக்கின்ற கொடிதான் உயிரோடு இருக்கும். செடியை விட்டுப் பிரிந்த கொடி மடிந்துபோகும். இந்த உருவகத்தில் இயேசு இரு உண்மைகளைக் காட்டுகிறார். முதல் உண்மை இயேசுவுக்கும் தந்தை இறைவனுக்கும் இடையே உள்ள உறவு. இயேசு என்னும் திராட்சைச் செடியை ”நட்டு வளர்ப்பவர்” இயேசு தந்தை என அழைக்கின்ற கடவுள்தாம். இதனால் இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு தெரிகிறது. இயேசு தந்தையோடு கொண்டுள்ள உறவு மனித உறவுகளைக் கடந்தது. ஆனால் அன்பின் நிறைவும் முழுமையும் அந்த உறவில் உண்டு. அந்த அன்பு எவ்வளவு ஆழமானது என்றால் இயேசு தம்மைக் காண்போர் தம் தந்தையையே காண்கின்றனர் என்றார். அதே நேரத்தில் இயேசு தந்தையின் திருவுளத்திற்கு முற்றிலும் அமைந்தவராகவே இவ்வுலகிற்கு வந்தார். தந்தை தமக்களித்த பணியை நிறைவேற்றுவதில் இயேசு கருத்தாயிருந்தார்.
தந்தையாம் கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு இயேசுவுக்கும் சீடர்களுக்கும் இடையே நிலவுகின்ற உறவாக மாறுகிறது. அதாவது, இயேசு தம்மைத் திராட்சைச் செடிக்கும் தம் சீடர்களைத் திராட்சைக் கொடிக்கும் ஒப்பிடுகிறார். இயேசு செடி என்றால் அவரில் நம்பிக்கை கொள்ளும் நாம் கொடிகள். கொடி செடியோடு இருந்தால் வாழ்வு பெறும்; செடியைப் பிரிந்த கொடி மடியும். இயேசுவோடு இணைந்திருத்தலில் இரு அம்சங்கள் உண்டு. முதலில் நாம் அவரிடத்தில் நம் முழு நம்பிக்கையையும் வைக்க வேண்டும். அதன் விளைவாக நாம் அவருடைய அன்புக் கட்டளையை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செயல்படும்போது கடவுளுக்கு நாம் மாட்சி அளிப்போம். கடவுள் நமக்குத் தருகின்ற வாழ்வு மறைந்துபோகும் ஒன்றல்ல; அது எந்நாளும் நீடிக்கின்ற நிலைவாழ்வு. அதே நேரத்தில் நம்மில் உறைகின்ற இறைவாழ்வு நற்கனிகளாக வெளிப்பட வேண்டும். அன்பிலிருந்தும் இறைநம்பிக்கையிலிருந்தும் பிறக்கின்ற கனிகள் மனித குலம் வாழ்வதற்கு வழியாகும். பிறருடைய நலனை நாம் முன்வைத்துச் செயல்படும்போது நாம் ”மிகுந்த கனி தருவோம்”. மனிதர் வாழ்வு பெறுவதே கடவுளுக்கு மாட்சியாக அமையு
Comments are closed.