செபிப்போமாக

விண்ணகத் தந்தையே, பரிசுத்த
கன்னிகையாகிய புனித மரியம்மாளை எல்லா அருட்கொடைகளாலும் அலங்கரித்து, உமது திருக்குமாரனைப் பெற்று அமுதூட்டி வளர்க்கும் தாயாக நித்தியந் தொட்டுத் தெரிந்து கொண்டீரே. அந்த உத்தம தாய் எங்களுக்காக மன்றாடிக் கேட்கும் விண்ணப்பங்களை நாங்கள் அடைந்து, வறுமை பிணி போன்ற துன்பங்களினின்று பாதுகாக்கப்படுவோமாக. அத்தாயின் வழியாக ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெற்றவர்களாய் தூய்மையின் வழி நடந்து விண்ணக முடியைப் பெற்றுக் கொள்ள அருள் கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். – ஆமென்

இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியே வாழ்க!

Comments are closed.