ஈழத்தின் கூத்து மரபின் மதிப்பார்ந்த கலைஞர் அன்ரனி பாலதாஸ் இறைவன் அடி சேர்ந்தார்

ஈழத்தின் கூத்து மரபின் மதிப்பார்ந்த கலைஞரும் திருமறை கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்திரு. பிறையன் அடிகளாரின் தந்தையுமாகிய அண்ணாவியார் அன்ரனி பாலதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தில் இறைவன் அடி சேர்ந்தார்.

ஈழக் கூத்தின் உயரம் ஒன்று
இன்று முதல்
தன் வாழ்வுச் சுரத்தை நிறுத்திக் கொண்டது.
தென்மோடி சங்கதியின் சுரங்கமொன்று
இற்றைத் தினம் முதல்
தன் அகழ்வை முடித்துக் கொண்டது.
யாரும் எட்ட முடியாத உச்ச ஸ்தாயி ஒன்று
இப்போதுமுதல்
தனக்குள் அமைதியானது.
காப்புச் சொல்லி ஆடிய கூத்துப் பிரவாகம் ஒன்று
இன்றுடன்
மங்களம் சொல்லி முடித்துக் கொண்டது.
வாழும் போது நாமெல்லாம்
அதிகம் கொண்டாடத் தவறிய மற்றுமோர் கலைஞன்
விடைபெற்றுக் கொள்கிறான்.

அண்ணாவியார் அ.பாலதாஸ் அவர்கள்
தனது பிறந்த நாளான இன்று தன் காலத்தை முடித்துக் கொண்டார்.
திருமறைக்கலாமன்ற கூத்துப் பிரிவுப் பொறுப்பாளராக அவர் இருந்த காலங்களில்
அவரிடம் பயின்றவைகள் கண்ணுக்குள் வந்து வந்து நெஞ்சைக் கனக்க வைக்கிறது.
எல்லோரையும் ஒவ்வொருவராய் இழக்கின்றோம். தூர தேசமிருந்து மனம் நொந்து அழுகின்றோம்.
“கலைஞன் ஒருவனின் இழப்பு ஒரு தனி மனிதனின் இழப்பல்ல. ஒரு சமுகப் பாரம்பரியத்தின் இழப்பு

Comments are closed.