யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் குருத்துவ அருட்பொழிவின் 44 ஆண்டுகள் நிறைவு
உயர்ந்த உருவம் – கம்பீர நடை – சிரித்த முகம் – கனிவான பார்வை – அன்பான பேச்சு – கடமையில் கவனம் – சிறந்த நிர்வாகம் – தூர நோக்கு – துணிவான செயல்முறை – அனைவரையும் ஆட்கொள்ளும் சுபாவம் எனப் பன்முக ஆளுமை கொண்ட ஒருவரான யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஆண்டகையிடம் யாழ் மறைமாவட்டம் மட்டுமல்ல இலங்கை வாழ் தமிழ் மக்களும் புலம் பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும்; நிறையவே எதிர்பார்க்கின்றனர்.
4 ஆயிரத்து 440 கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட யாழ் மறைமாவட்டத்தில் ஏறக்குறைய 15 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 2 இலட்சத்து 47 ஆயிரத்து 315 பேர் கத்தோலிக்கராவா.; யாழ் மறைமாவட்டத்தின் 59 பங்குகளில் 162 குருக்கள் பணியாற்றுகின்றனர். யாழ் ஆயர் மேதகு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கு நிறைந்த அருள் – வழிகாட்டும் ஞானம் – நீடித்த ஆயுள் – நல்ல சுகம் – நேர்மையான ஆட்சி – முழுமையான ஒத்துழைப்பு என்பன நிறையவே கிடைக்க இறையாசீர் வேண்டுவோம்
Comments are closed.