திருத்தந்தையின் நாம விழாவுக்கு உலகினரின் வாழ்த்துக்கள்
புனித ஜார்ஜ் நினைவாக, ஹோர்கே மாரியோ பெர்கோலியோ (Jorge Mario Bergoglio) என்ற இயல் பெயரைக் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 23, இத்திங்களன்று, கொண்டாடப்பட்ட இப்புனிதரின் திருநாளையொட்டி, தன் நாம விழாவைச் சிறப்பித்தார்.
இவ்விழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து வாழ்த்துக்கள் வந்துள்ளன.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென உருவாக்கப்பட்டுள்ள C9 எனப்படும் கர்தினால்கள் குழுவின் 24வது சந்திப்பு, ஏப்ரல் 23, இத்திங்கள் முதல், 25 புதன் முடிய வத்தக்கானில் நடைபெற்று வருகிறது.
2013ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் 3 முடிய தங்கள் முதல் சந்திப்பை மேற்கொண்ட இக்குழுவினர், 2013ம் ஆண்டு இரு முறையும், 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு முடிய ஒவ்வோர் ஆண்டும் ஐந்து முறைகளும் வத்திக்கானில் சந்தித்து, திருத்தந்தைக்கு ஆலோசனைகள் வழங்கி வந்துள்ளனர்.
2018ம் ஆண்டு, பிப்ரவரி 26ம் தேதி முதல் 28ம் தேதி முடிய இவ்வாண்டின் முதல் சந்திப்பை மேற்கொண்ட இக்கர்தினால்கள் குழு, தற்போது இவ்வாண்டின் 2வது சந்திப்பைத் துவங்கியுள்ளனர்.
வத்திக்கான்
Comments are closed.