உலக பூமி தினம் ஏப்ரல் 22
சுத்தமற்ற தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற சூழல்களால் ஏற்படும் நோய்களால், உலகில் ஒவ்வொரு நாளும், 700க்கு மேற்பட்ட சிறார் இறக்கின்றனர் என்றும், 2040ம் ஆண்டுக்குள், உலகில் நான்கில் ஒரு சிறார் தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் வாழ்வார்கள் என்றும், யுனிசெப் நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஏப்ரல் 22, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் உலக பூமி தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள, ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யூனிசெப், 2040ம் ஆண்டுக்குள், ஒரு வயதுக்குட்பட்ட ஏறத்தாழ ஒரு கோடியே எழுபது இலட்சம் குழந்தைகள், கடும் மாசுக்கேடு உள்ள பகுதிகளில் வாழ்வார்கள் என்றும் கூறியுள்ளது.
உலகில், ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வொரு நாளும், ஏறத்தாழ பத்து இலட்சம் குழந்தைகள், பிறந்த நாளன்றே இறக்கின்றன, மேலும், 16 இலட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் இறக்கின்றன என்றும், யுனிசெப் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.
Comments are closed.