செபிக்கும்போது கண்ணீர்விட்டு அழுது செபிப்பதால் என்ன நடக்கும்

1) தேவனை நன்றி உள்ள இதயத்தோடு நாம் பாடி துதிக்கும் போது, நமது கைகளை தட்டி பாடல்களை பாடுகிறோம்.

• நமது கையில் உள்ள எல்லா நரம்புகளும் அதிர்ச்சி அடைந்து, உடலில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
ஏனெனில் உடலின் ஒவ்வொரு பகுதிக்கான நரம்புகளும், நமது கையில் இடம் பெற்று உள்ளதாக, அக்குபிரஷர் தெரபி மருத்துவம் கூறுகிறது. இந்த மருத்துவ முறையில் கையில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட அழுத்தம் அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2) நமது கைகளை தட்டி பரிசுத்தாவியில் நிரம்பி கர்த்தரை துதிக்கும் போது

• உடலில் உள்ள இரு தோல் பட்டைகளும் சீரான இயக்கத்தை பெற்று, இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் சீரமைக்கப்பட்டு, உடலில் உள்ள மற்ற எல்லா பகுதிகளுக்கும் இரத்தத்தை அனுப்புவது எளிதாகிறது.

3) நாம் முழங்கால்படியிட்டு ஜெபிக்கும் போது

• நமது உடல் சமநிலையை பெறுவதோடு, உடலின் இரத்த ஓட்டம் சீராக மாறுகிறது. இதனால் நமது உடலில் உள்ள வாயுத் தொல்லைகள், தேவையற்ற கொழுப்புகள் மற்றும் நீர் ஆகியவை குறைகிறது. இரத்த ஓட்டம் சீராகும் போது, மாரடைப்பு, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

4) கண்ணீரோடு கூடிய ஜெபத்திற்கு தேவன் பதில் அளிக்காமல் விடுவதில்லை என்று வேதம் கூறுகிறது. அதே நேரத்தில் கண்ணீர் விட்டு ஜெபிக்கும் போது,

• கண்கள் சுத்தம் ஆகின்றன. இதனால் நமது கண்ணில் உள்ள தூசிகள், நோய் கிருமிகளின் தொற்று போன்றவை கண்ணீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. இதனால் நமக்கு தெளிவான பார்வையை பெற முடிகிறது. கண்ணீர் ஜெபத்தை செய்வதால், மனதில் உள்ள பாரம் குறைகிறது. தலையில் உள்ள தேவையற்ற நீர் குறைக்கப்படுகிறது

5) நமது ஜெபங்களில் அதிக வல்லமையையும் தேவனை சந்திக்கவும் உதவும் ஒன்று அதிகாலை ஜெபம் ஆகும். அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது,

• நமது உடல், மனம், மூளை ஆகியவை புத்துணர்வு மிகுந்ததாக மாறுகிறது. இதனால் தேவையற்ற களைப்பு, மந்த நிலை, தலைச்சுற்று ஆகியவை நீங்குகின்றன. அதிகாலையில் தேவனை பாடி துதிக்கும் போது, நமது குரல் வளம் பெறுகிறது. மேலும் சுவாசக் கோளாறுகள், மூச்சு குழாய் தொடர்பான பிரச்சனைகள் நீங்குகின்றன.

6) தேவ சமூகத்தில் உபவாசத்தோடு ஜெபிக்கும் போது

• நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. ஜீரண சுரப்பிகள் புத்துணர்வு பெறுகின்றன. வாரத்தில் இரு நேரம் உணவை தவிர்ப்பது உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

• நமது மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்க வேண்டுமானால், மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் என்பது மனோத்தத்துவ மருத்துவர்களின் ஆலோசனைகளில் ஒன்று. இதன் அடிப்படையில் நமது மனதை ஒருமுகப்படுத்த தியானம், யோகா உள்ளிட்ட பல முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் தேவையானது ஒன்றே
——————————————————-
ஒரே சர்வேசுரனை முழு மனதுடனேஆராதிப்பாயாக,

நமது தேவன் மனிதனின் சரீரத்தை படைத்து, ஆவியை அவனுக்குள் ஊதினவர் என்பதை நாம் மறக்க கூடாது. எனவே அவர் இரண்டிற்கும் ஆசீர்வாதத்தையும், சுகத்தையும் அருள வல்லமை உள்ளவராக உள்ளார்.


 

Comments are closed.