மன்னார் மறைசாட்சியர்களை புனித நிலைக்கு உயர்த்துவதற்கான முயற்சியும் மன்னார் ஆயரின் உரோமைக்கான பயனமும்

அதிவணக்கத்துக்குறிய மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை உரோமையை வந்தடைந்தார். மறுநாள் காலை மன்னார் மறைசாட்சிகளை புனித நிலைக்கு உயர்த்துவதற்கான முன்னெடுப்புக்களை செய்துவருகின்ற அருட்பணி தோமஸ் அடிகளார் அவர்களை சந்தித்துள்ளார். அத்தோடு வத்திக்கானிலுள்ள கர்தினாலுடன் மன்னார் மறைசாட்சியர் தொடர்பாக கலந்துரையாடினார் மேலும் அருட்பனி தோமஸ் அடிகளார் மன்னார் மறைசாட்சியர் என்ற தலைப்பில் எட்டு பக்கங்களை கொண்ட ஒரு ஆய்வுக் கட்டுரையை எடுத்துரைத்தார்.
மேலும் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஆயர் மன்னார் மறைசாட்சிகள் இலங்கை முழுவதும் நினைவு கூறவேண்டிய நாளை பிரகடணப்படுத்துவதற்கு ஆலோசிப்பதாகவும் அத்தோடு மன்னார் மறைசாட்சியர் பற்றிய மேலும் பல ஆவணங்களை தமிழ் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளிலும் வெளியிடயிருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து இக்காரனத்திற்காக மன்னார் மறைமாவட்டத்தில் நியமிக்கப்பட்ட குருக்கள் கொண்ட குழுவை மேலும் பலப்படுத்துவதாக தெரிவித்தார். மன்னார் மறைசாட்சிகள் புனிதர்களாக திருநிலைப்படுத்துவதற்கு தொடர்ந்து இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான ஆய்வுகளை இலங்கையிலுள்ள ஆவணக்காப்பகங்களிலும் தகவல் திரட்டப்படுவதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு அருட்சகோதரர் இம்மனுவேல் றொகேசியஸ் உரோமாபுரியிலுள்ள இயேசு சபைக்கு சொந்தமான நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை அருட்பனி தோமஸ் அடிகளாரிடம் கையளித்தார். 

Comments are closed.