யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் மன்றத்தினரால் நடாத்தப்பட்ட குறும்பட போட்டிமுடிவுகள்
யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் மன்றத்தினரால் நடாத்தப்பட்ட குறும்பட போட்டியின் இறுதி மதிப்பீட்டு நிகழ்வு இன்று 24.08.2018 திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியற் கல்லூரியில் நடைபெற்றது. இளவாலை புனித யாகப்பர் ஆலய இளையோரின் ‘நெருடல்’ குறும்படம் முதலாம் இடத்தினையும், உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய இளையோரின் ‘இடையன்’ குறும்படம் இரண்டாம் இடத்தினையும், சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய இளையோரின் ‘வெளிச்சம்’ கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய இளையோரின் ‘விழிகள்’ குறும்படங்கள் மூன்றாம் இடத்தினையும், மணல்காடு பங்கு இளையோரின் ‘இறை திட்டம் தேடும் இளையோர் பயணம்’ குறும்படம் சிறப்பு பரிசினையும் பெற்றுகொண்டன,
Comments are closed.