தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வுமையம் ஆதரவில் தனிநாயகம் அடிகள் நினைவுப்பேருரை
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் யாழ் நகரில் 125 யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள குடும்ப மருத்துவ நிறுவகத்தில் மேல் மாடியில்; 2017ஆம் ஆண்டு உதயமாகியது. இதன் முதல் நினைவுப் பேருரையை முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்தி தனிநாயகம் அடிகளாரின் தொலைநோக்கு அவரை ஒரு தமிழ்மொழிக் காவலனாகவே அறிமுகம் செய்ய வைத்தது என தெரிவித்தார்.
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வுமையம் ஆதரவில் தனிநாயகம் அடிகள் இரண்டாவது நினைவுப்பேருரையை தனிநாயகம் அடிகளின் தமிழர் ஆன்மீகம் என்னும் தலைப்பில் திருச்சி இந்தியா தமிழ் இலக்கிய கழக தலைவர் கலாநிதி அமுதன் அடிகள் வழங்கினார். 17 பெப்ரவரி 2018 அன்று யாழ்ப்பாணம் 360 பிரதானவீதியில் அமைந்துள்ள கத்தோலிக்க அச்சக பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது.
உண்மையின் எண்ணங்கள்
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவுப் பேருரை
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வுமையம் ஆதரவில் தனிநாயகம் அடிகள் இரண்டாவது நினைவுப்பேருரையை தனிநாயகம் அடிகளின் தமிழர் ஆன்மீகம் என்னும் தலைப்பில் திருச்சி இந்தியா தமிழ் இலக்கிய கழக தலைவர் கலாநிதி அமுதன் அடிகள் வழங்கினார். 17 பெப்ரவரி 2018 அன்று யாழ்ப்பாணம் 360 பிரதானவீதியில் அமைந்துள்ள கத்தோலிக்க அச்சக பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது. கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் திரு அன்ரன் பிலிப் சின்னராசா அவர்கள் தனிநாயகம் அடிகள் மேலும் தமிழின் மேலும் கொண்ட தீராத பற்றினால் தமது நீண்டகால திட்டமாக இம்முயற்சியை முன்னெடுத்துள்ளார். தனது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து மற்றவர்களின் உதவியையும் பெற்று தூரநோக்குடன் ஆற்றும் இப்பணிக்கு கைகொடுக்க அனைவரும் முன்வர வேண்டும். தமிழ் மொழி – இலக்கியம் – பண்பாடு – ஆன்மிக வளங்களில் ஆய்வுப் புலமை அடைவதற்கு இம்மன்றம் வழிவகுக்கும் என்ற அழைப்பை சிறப்பாகப் பயன்படுத்த தகுதி வாய்ந்தவர்கள் முன்வரவேண்டும். அ.பி.ஜெயசேகரம் அடிகளாih இயக்குனராகக் கொண்டு நடைபெறவுள்ள மேற்படி திட்டத்தில் இப்பணியை திட்டமிட்டுத் தீர்மானித்து செயற்படும் அனைவரையும் காலைக்கதிர் கிறீஸதவ செய்தி இதழ் பாராட்டுகிறது. பணி சிறக்க வாழ்த்துகிறது.
Comments are closed.